Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எழுக தமிழிற்கு வேகம் பிடிக்கின்றது!

பதிந்தவர்: தம்பியன் 04 September 2016

எழுக தமிழிற்கு வடக்கு வேகமாக தயாராகி வருகின்றது. எதிர் வரும் 24 திகதி யாழ் குடாநாட்டில் நடைபெற இருக்கும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணியை நடாத்துவதற்கான சிறப்பு ஒன்றுகூடல் இன்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நீர்வேலி அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்த ஒன்றுகூடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும், கட்சித்தொண்டர்களு<wbr />ம் கலந்து கொண்டனர்.

இதில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் த.சித்தார்த்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருடன் அந்தந்த கட்சிப் பிரதிநிதிகளும் கூடியிருந்தனர்.

ஒன்றுகூடலில் எழுக தமிழ் பேரணி குறித்து மக்கள் மத்தியில் எவ்வாறான பிரச்சாரங்களை முன்னெடுப்பது, பேரணியில் கலந்து கொள்ளும் மக்களுக்கான போக்கு வரத்து மற்றும் ஏனைய ஒழுங்குபடுத்தல்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டதாக தெரியவருகின்றது.

வடக்கின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மக்களினை அணி திரட்ட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to எழுக தமிழிற்கு வேகம் பிடிக்கின்றது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com