கடந்த வருடம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் பங்களித்ததாக சூழ்சிக்காரர்கள் சிலர் பெருமை பேசுகின்றனர் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாவது, “சிலர் கடந்த வருடம் ஆட்சி மாற்றத்துக்கு உதவியதாக பெருமை பேசுகின்றனர். ஆனால், அவர்கள் ஆட்சி மாற்றத்துக்கான சூழ்ச்சியிலேயே பங்கெடுத்துள்ளனர்.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சி எந்த வகையிலும் மாற்றத்தை சந்திக்கவில்லை. ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையோ, செயற்பாடுகளோ, கோட்பாடுகளோ மாற்றமடையவில்லை. மாறியதெல்லாம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்த சில உறுப்பினர்கள் மட்டுமே.” என்றுள்ளார்.

0 Responses to ஆட்சி மாற்றத்தில் பங்களித்ததாக சூழ்சிக்காரர்கள் பெருமை பேசுகின்றனர்: மஹிந்த