பிரதமர் நரேந்திர மோடி அரசின் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் திட்டம் ஃபேர் & லவ்லி போன்றதுதான் என்று, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கிண்டலடித்துள்ளார்.
மத்திய அரசு இந்த மாதம் இறுதிக்குள், மக்கள் தங்களிடம் இருக்கும், இதுவரை கணக்கில் காட்டாத அசையும் சொத்துக்கள், அசையும் சொத்துக்களை மத்திய வருவாய் துறையிடம் காண்பித்து, அதற்கான குறைந்த வரியை செலுத்துவதோடு, அபாரதக் கட்டணத்தையும் செலுத்தி, முறையான சொத்துக்களாக அவற்றை மாற்றிக்கொள்ளலாம் என்று ஒரு சலுகையை அறிவித்துள்ளது.
கடந்த இரு மாதங்களாக இந்த நடைமுறை அமலில் இருந்து வரும் நிலையில், இந்த மாதத்துடன் அதற்கான கால அவகாசம் முடிவடைகிறது. எனினும், இதனால் எந்தவித பயனும் இல்லை என்றும், கருப்பில் இருக்கும் பணம் சொத்துக்கள் இன்னமும் 75 சதவிகிதம் வரை அப்படியே இருக்கின்றன என்றும் வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுக்குறித்து உத்திர பிரதேசத்தில் பேசிய ராகுல்காந்தி, மோடி இதுவரை உலக தலைவர்களுடன் மற்றும் உலக தொழிலதிபர்கள், மக்கள் என்று அவர்களுடன் மட்டுமே ஆசை ஆசையாக செல்ஃபி எடுத்துக் கொள்கிறார். எந்த விவசாய மற்றும் தொழிலாளி, உழைக்கும் வரக்கத்தினருடன் அவர் செல்ஃபி எடுத்துக்கொண்டது உண்டா என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், மோடியின் அரசு தற்போது அமல்படுத்தி உள்ள கறுப்புப் பணத்தை மக்கள் வெள்ளையாக மாற்ற முன்வர வேண்டும் என்கிற திட்டம் மக்களை ஏமாற்றும் ,ஃபேர் & லவ்லி போன்றதுதான் என்றும் கிண்டலுடன் பேசியுள்ளார்.

0 Responses to மோடி அரசின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் திட்டம் ஃபேர் & லவ்லி போன்றதுதான்:ராகுல் கிண்டல்