சசிகலா புஷ்பாவின் முன்ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
வீட்டுப் பணிப்பெண்களை பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளுக்கு, சசிகலா புஷ்பா எம்பி மற்றும் அவரது கணவர், மகன், மாமியார் ஆகியோர் உட்படுத்தினர் என்று நால்வர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ், தூத்துக்குடி காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவாகி உள்ளன.இவ்வழக்குகளில் தம்மை கைது செய்துவிட முடியாதபடி முன்ஜாமீன் வேண்டும் என்று தூத்துக்கு நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா முன் ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
ஆனால், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில் சசிகலா புஷ்பா, டெல்லி உயர் நீதிமன்றம் தம்மை கைது செய்ய தடை விதிக்கப்பட்ட நாட்கள் முடியும் தருவாயில் உள்ளதால், தமது இந்த முன்ஜாமீன் மேல் முறையீட்டு வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த முன் ஜாமீன் மேல்முறையீட்டு மனுவினை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி் வழங்கியுள்ளது.வரும் வெள்ளிகிழமை முன் ஜாமீன் வழக்கு விசாரணை நடைபெறும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

0 Responses to சசிகலா புஷ்பாவின் முன்ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!