உரி தாக்குதலுக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காஷ்மீரில் உள்ள உரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 ராணுவத்தினர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியாவுடன் ஐ.நா. தோள் கொடுக்கும் என்றும் ஐ.நா.உறுதி அளித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
நியூயார்க்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் 71வது பொதுக் குழுக் கூட்டம் இன்று தொடங்குகிறது. வரும் 26ம் தேதி வரை நடக்கும் இக்கூட்டத்தில் பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதங்கள் நடைபெறும்.ஐ.நா. பொதுச் செயலராக பான் கி மூனும், அமெரிக்க அதிபராக பராக் ஒபாமாவும் பங்கேற்கும் கடைசி ஐ.நா. பொதுக் குழுக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to உரி தாக்குதல்: ஐ.நா. கடும் கண்டனம்!