கபாலி படம் தொடர்பான விவகாரத்தில் பொதுமக்களின் பணம் அதிக கட்டணம் என்கிற பெயரில் கொள்ளையடிக்கப்படுவதை சகித்துக்கொள்ள முடியாது என்று, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் வெளியான படம் கபாலி.இதற்கு கேளிக்கை வரி விளக்கும் அளிக்கப்பட்ட நிலையில், படம் வெளியாகி பல தினங்களாகியும் டிக்கெட் கட்டணம் 6 மடங்காக உயர்த்தி விற்கப்பட்டது என்றும், இதுக் குறித்து 31 திரையரங்கம் தொடர்புடைய காவல் நிலையங்களில் புகார் அளித்தும் இன்றுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞர் பொது நல மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், எத்தனை முறை கணடனம் தெரிவித்தும் இது தொடர்கதையாகி வருகிறது என்றும், கேளிக்கை வரி விலக்கையும் பெற்றுக்கொண்டு, அதிக கட்டணம் அதுவும் 6 மடங்கு அதிக கட்டணம் வசூலிப்பது என்பதை பொது மக்களின் பணத்தை கொள்ளையடிப்பது என்கிற அடிப்படையில் இந்த குற்றம் எடுத்துக்கொள்ளப் படுகிறது என்றும் வேதனை தெரிவித்துள்ளனர். இனியும், இதுபோல பொது மக்களின் பணம் கொள்ளை போவதை சகித்துக்கொள்ள முடியாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இவ்வழக்கில் அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர்,, இதுக் குறித்து விளக்கம் அளிக்க கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். கால அவகாசம் வழங்கப்படும் என்றும், ஆனால், திரைப்படங்களுக்கு கட்டண விதிமுறைகளை எப்படி எவ்வாறு சீரமைக்கப் போகிறீர்கள், இனி பொது மக்களின் பணம் இப்படி கொள்ளை போகாது என்பதற்கு என்ன உத்திரவாதம்,மனுதாரர் கொடுத்த புகார்களின் மீது இதுவரை காவல்துறை என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுத்துள்ளன என்பதுக் குறித்தெல்லாம் விரிவான விளக்க அறிக்கையாக அந்த அறிக்கை இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளனர். வழக்கு விசாரணையை வருகின்ற அக்டோபர் மாதம் 21ம் திகதி ஒத்தி வைத்துள்ளனர்.

0 Responses to பொது மக்களின் பணம் அதிக கட்டணம் என்கிற பெயரில் சினிமாவால் கொள்ளையடிக்கப்படுவதை சகிக்க முடியாது: நீதிபதிகள்