தமிழ் மக்கள் நீண்ட காலமாக கோரிவரும் முறையான அரசியல் தீர்வை புதிய அரசியலமைப்பு கொண்டிருக்காவிட்டால் அதனை நிராகரிப்போம். அதாவது, நியாயமான தீர்வு கிடைக்காதுவிடின் தமிழ் மக்களை ஆளமுடியாத நிலை ஏற்படும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் மக்கள் இந்த நாட்டின் ஆட்சிக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டுமாயின் அவர்கள் எதிர்பார்க்கும் முறையான அரசியல் தீர்வொன்றையும், அரசாங்கம் முன்வைக்க வேண்டும். நாம் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு முன்வைக்கப்படவில்லையாயின் அரசியலமைப்பு சட்டவரைவு முறையில் அரசாங்கம் தவறு விடுமாக இருந்தால் இதில் எமது எதிர்பார்க்கைகள் நிறைவேறாமல் போனால் நாம் மீண்டும் ஆயுதம் ஏந்த மாட்டோம். ஆனால் எம்மை ஆள முடியாத நிலையை ஏற்படுத்துவோம்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த நல்லாட்சிக்கான பெண்கள் அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “புதிய அரசியலமைப்பு வரைவில் நாம் முக்கியமான பங்களிப்பை செய்து வருகின்றோம். எங்களுடைய எதிர்பார்ப்பு இம்முறை உருவாக்கப்படும் அரசியலமைப்பில் மூலம் தமிழ் மக்களுடைய நீண்டகால பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதாகும். இதுவரை உருவாக்கப்பட்ட எந்தவொரு அரசியலமைப்பும் தமிழ் மக்களுடைய ஆதரவுடனோ சம்மதத்துடனோ கொண்டு வரப்படவில்லை.” என்றுள்ளார்.

0 Responses to நியாயமான தீர்வு கிடைக்காது விடின், எம்மை ஆளமுடியாத நிலை ஏற்படும்: சம்பந்தன்