Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரச புனர்வாழ்வில் இருந்த போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி செலுத்தப்பட்டதாக கூறப்படுகின்ற நிலையில், முன்னாள் போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் அவர் இன்று வியாழக்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில், மருத்துவப் பரிசோதனைகளுக்கான நேர விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ப.சத்தியலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மத்தியில் தமது உடல் நலம் தொடர்பில் நிலவுகின்ற கவலைகளைக் கருத்தி ற்கொண்டு, வடக்கு மாகாண சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக அவர்களது நலன்கள் தொடர்பாக எமது அமைச்சு கவனம் செலுத்தத் தீர்மானி த்துள்ளது.

இதன் பிரகாரம் மேற்படி புனர்வாழ்வு பெற்றவர்கள் தமது உடல்நிலை குறித்து மேற்கொள்ளக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவ ஆலோசனைகளையும், மருத்துவக் கவனிப்பையும் வழங்க வடக்கு மாகாண சுகா தார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

எனவே, இத்தகைய மருத்துவ வசதிகள் தேவைப்படுபவர்கள் பின்வரும் வைத்தியசாலைகளில் உரிய வைத்திய அதிகாரிகளைச் சந்தித்து தமக்கான ஆலோசனைகளையும், சேவைகளையும் பெற்றுக்கொள்ளமுடியும்.

மருத்துவ ஆலோசனைகளை பெறவிரும்புவோர் மாவட்ட வைத்திய சாலைக ளிலுள்ள வரவேற்பாளரை அணுகி மருத்துவ பரிசோதனை நடைபெறும் இடத்தி ற்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

முதற்கட்டமாக நாளை மற்றும் 9ஆம் திகதிகளில் பின்வரும் வைத்திய சாலை களில் இம் மருத்துவக் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்குச் சமுகமளிக்க முடி யும்.” என்றுள்ளது.

மருத்துவப் பரிசோதனை நேர விபரங்கள்:

மாவட்ட பொது வைத்தியசாலை, கிளிநொச்சி - பி.ப. 4 மணி

மாவட்ட பொது வைத்தியசாலை, முல்லைத்தீவு - மு.ப 8 மணி

மாவட்ட பொது வைத்தியசாலை, வவுனியா - பி.ப. 1 மணி

மாவட்ட பொது வைத்தியசாலை, மன்னார் - மு.ப 8 மணி

போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் - பி.ப. 1 மணி

0 Responses to முன்னாள் போராளிகளுக்கான மருத்துவப் பரிசோதனை நேர விபரங்கள் அறிவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com