இலங்கை மக்களிடம் கடந்த காலத்தில் காணப்பட்ட பயம் மற்றும் சந்தேகத்தை புதிய அரசாங்கம் நீக்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வுகளில் கலந்து கொண்டு நேற்று புதன்கிழமை (இலங்கை நேரப்படி இன்று வியாழக்கிழமை அதிகாலை 01.30 மணி) உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளதாவது, “இலங்கை 2017ஆம் ஆண்டு ஏழ்மையில் இருந்து விடுதலை அடையும் ஆண்டாக பெயரிடப்பட்டுள்ளது. புதிய அரசாங்கம் உருவாகி 20 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இலங்கை மக்களிடம் காணப்பட்ட பயம் மற்றும் சந்தேகத்துடான வாழ்க்கை முறையினை மாற்றியுள்ளது.
அத்துடன், மக்களுக்கு வேண்டிய சுகந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையினை உலகில் உள்ள மிகவும் சந்தோசமான நாடுகளினுள் ஒன்றாக மாற்றி மக்களுக்கு கையளிப்பதே குறிக்கோளாக கொண்டுள்ளோம். இதேவேளை, இலங்கை நாட்டின் ஜனாதிபதியாக இக் கூட்டத்தொடரில் கலந்துக்கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது.” என்றுள்ளார்.

0 Responses to இலங்கையர்களிடம் காணப்பட்ட பயம் மற்றும் சந்தேகத்தை புதிய அரசாங்கம் நீக்கியுள்ளது; ஐ.நா.வில் மைத்திரி!