உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், வரும் 16ம் தேதி காலை முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும் என்றும், வரும் 22ம் தேதி மாலை 8 மணி வரை உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பம் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னை மாநகராட்சிக்கான விண்ணப்பங்கள் கட்சி தலைமையகத்தில் வழங்கப்படும் மற்ற மாவட்டங்களில் மாவட்ட தலைமை கழகத்தில் விநியோகம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
மாநகராட்சி மாமன்ற கவுன்சிலர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.11,000/-நகர்மன்ற வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க கட்டணம்:ரூ.5,000/-பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க கட்டணம்:ரூ.2,000/- மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.11,000/-என்று அறிக்கையில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

0 Responses to உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கலாம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு!