உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை என்று, கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கு வருகிற 20ம் திகதி வரை கர்நாடக அரசு, காவிரியில் தினமும் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவுப் பிறப்பித்துள்ளது. இதற்கு அம்மாநிலத்தில் அனைத்துத் தரப்பிடமிருந்தும் கடுமையான எதிர்ப்புக்கு கிளம்பி, மக்கள் அங்கு வன்முறையில் ஈடுபட்டு வரும் நிலையில், சித்தராமையா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இடைக்காலமானதுதான் என்றும், அதை நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை என்றும் கூறினார். நீதியை தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ள சித்தராமையா, கர்நாடகாவில் தண்ணீர் இல்லை என்பதை உரிய ஆதாரத்தோடு நீதி மன்றத்தில் நிரூபிக்க உள்ளதாகத் தெரிவித்தார்.
இதுத்தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று பிரதமரை சந்தித்து வலியுறுத்த, நாளை பிரதமரிடம் நேரம் கேட்டு உள்ளதாக சித்தராமையா தெரிவித்துள்ளார்.

0 Responses to உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை: சித்தராமையா