யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியில் அதிபர் நியமனம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு சட்டப்படி நடவடிக்கை காணப்படும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உறுதியளித்துள்ளதாக அமெரிக்க சிலோன் திருச்சபையின் முன்னாள் தலைவர் அன்னப்பா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
உடுவில் மகளிர் கல்லூரியில் முன்னர் கடமையாற்றிய அதிபரை கல்லூரியின் ஆளுநர் சபையானது திட்டமிட்டே பதவியில் இருந்து ஒய்வுபடுத்தி, புதிய அதிபரை நியமித்துள்ளதாக குற்றஞ்சாட்டியும், முன்னைய அதிபரையே மீண்டும் சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியும் கல்லூரியின் மாணவிகள், பழைய மாணவிகள், பெற்றோர்கள் கடந்த ஒருவார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக, கடந்த வாரம் யாழ்ப்பாணம் வந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கல்லூரியின் மாணவிகளால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து இப்பிரச்சினை தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உரிய, நடவடிக்கைகளை எடுப்பார் என ஜனாதிபதி அன்றைய தினமே அறிவித்திருந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாணவிகளும், அமெரிக்க (மிஷன்) திருச்சபையை சேர்ந்த அருட்தந்தைகள் சிலரும் வடக்கு மாகாண முதலமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தக் கலந்துரையாடல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்ட விடயத்தை அமெரிக்க சிலோன் திருச்சபையின் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாம் அமெரிக்க மிஷனினை (திருச்சபையை) சார்ந்தவர்கள். எங்களினூடாகவே கல்லூரிக்கான நிதி வழங்கப்படுகின்றது. அந்தவகையில் தற்போது உடுவில் மகளிர் கல்லூரியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக முதலமைச்சருடன் பேசியிருந்தோம். அவர் எமது பிரச்சினைகள் தொடர்பாக ஆவலுடன் கேட்டறிந்ததுடன் இது தொடர்பாக தாம் முன்னரே அறிந்திருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
குறிப்பாக இந்தக்கலந்துரையாடலில் முதலமைச்சரிடம் வலியுறுத்தியது பிள்ளைகள் கல்வி கற்பதற்குரிய சூழல் தற்போது அக்கல்லூரியில் இல்லை என்பது தொடர்பாகவும் பிள்ளைகள் தொடர்ச்சியாக நிர்வாகத்தினால் தாக்கப்படுகின்றமை தொடர்பாகவுமே. இதன்போது மாணவிகளும் முதலமைச்சரிடம் தமது பிரச்சினைகள் தொடர்பாக தெரிவித்திருந்தார்கள்.
கல்லூரியில் கல்வி கற்கக்கூடிய ஒர் சூழல் இல்லை என்பதையும் முன்னைய அதிபரே தொடர்ந்து சேவையில் ஈடுபட வேண்டியதன் அவசியத்தையும் அதனூடாக தமது கற்றல் செயற்பாடுகளுக்கு எவ்வாறு பக்கபலம் கிடைக்கும் என்பன தொடர்பாகவும் தெரிவித்திருந்தார்கள்.
இவற்றை விட அரசியல் சார்ந்தவர்களாலும் அரசியல்வாதிகளாலும் அவர்களது அடியாட்களாலும் தாம் தொடர்ச்சியாக மிரட்டப்படுவதாகவும் அவர்கள் முதலமைச்சரிடம் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் தெரிவிக்கையில் இப் பிரச்சினை தொடர்பாக தம்மால் சட்டத்திற்கு உட்பட்டு எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக தெரிவித்திருந்தார். அவர் கூறியது எமக்கு நம்பிக்கையாக இருந்ததுடன் இப்பிரச்சனை தொடர்பில் சுமுகமான தீர்வொன்று எட்டப்படும் எனவும் தாம் நம்புகின்றோம்.” என்றுள்ளார்.

0 Responses to உடுவில் மகளிர் கல்லூரி பிரச்சினைகளுக்கு சட்டப்படி நடவடிக்கை: விக்னேஸ்வரன் உறுதியளிப்பு!