எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறைத் தீர்வாகாது என்று இரு மாநில மக்களின் காவிரி பிரச்சனையில் பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வாரமாகவே கர்நாடகாவில் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடைப்பெற்று வந்தன. ஆனால், நேற்று முன்தினத்திலிருந்து இந்த போராட்டம் வன்முறையாக வெடித்து, பெங்களூர் மற்றும் மாண்டியா நகரங்களில் மக்கள் பீதியடையும் நிலைக்கு வன்முறை வலுத்தது.
இந்நிலையில், இன்று அங்கு துணை ராணுவம் குவிக்கப்பட்டு, இன்று வன்முறை கட்டுக்குள் உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், உணர்வுப் பூர்வமனன பிரச்சனையில் வன்முறை வெடித்துள்ளது வேதனை அளிக்கிறது என்றும், கர்நாடக-தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் மோடி கோரிக்கை வைத்துள்ளார்.கர்நாடக மக்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ள மோடி, எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறைத் தீர்வாகாது என்றும் ஜனநாயக முறையில் பேச்சு வார்த்தையின் மூலமே பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் கூறியுள்ளார். எனவே, இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும் என்று மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 Responses to எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது: காவிரி பிரச்சனையில் மோடி கருத்து!