போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தல் மற்றும் அதிகரிக்கும் விபத்துக்களைத் தவிர்த்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விசேட ஆராய்வுக் கூட்டமொன்று இடம்பெற்றது.
தீர்வு காணப்படாமலுள்ள பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணைகளை விரைவுபடுத்தி அவற்றிற்கான தீர்வுகளை காண்பது தொடர்பிலும் சட்டம் ஒழுங்கை முழுமையான முறையில் மாவட்டத்தில் நிலை நாட்ட ஏதுவான சூழலை உருவாக்குவது தொடர்பிலும் இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் மற்றும் மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினர் கலந்து கொண்டனர்.

0 Responses to போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பில் யாழில் விசேட ஆராய்வுக் கூட்டம்!