ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 33வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கவுள்ளது. இதில், இலங்கை விவகாரங்கள் பிரதானமாக உள்ளடக்கப்படாத போதிலும், பலவந்தமாக ஆட்களைக் காணாமற்போகச் செய்தல் (ஆட்கடத்தல்) என்கிற தலைப்பிலான அறிக்கையிடலின் போது இலங்கையும் கவனம் பெறும் என்று தெரிகின்றது.
எதிர்வரும் வியாழக்கிழமை வெளியிடப்படவுள்ள பலவந்தமாக ஆட்களைக் காணாமற்போகச் செய்தல் தொடர்பான ஐக்கிய நாடுகள் செயற்குழுவின் அறிக்கையில் இலங்கை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமற்போதல்கள் இலங்கையில் நீண்டகாலமாக இழுபட்டுவரும் விடயமாக காணப்படும் சூழ்நிலையில், 2015ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பலவந்த காணாமற்போதல்கள் தொடர்பான செயற்குழுவினர் தமது விஜயத்தின் அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கையை தயாரித்துள்ளனர்.
எனினும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த வாரம் சந்தித்திருந்த இலங்கை அரசாங்கப் பிரதிநிதிகள், மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்கு, ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும், நல்லாட்சியை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்ததுடன், காணாமற்போதல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் செயற்குழுவுடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தது. குறித்த செயற்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தியிருப்பதாகவும் இலங்கை சார்பில் கூறப்பட்டுள்ளது.
இருந்தபோதும், பலவந்த காணாமற்போதல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் செயற்குழுவின் அறிக்கையில் இலங்கை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள், 33வது கூட்டத் தொடர் விவாதங்களில் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்றிருந்த 32வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அல் ஹூசைன் வாய்மூல அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்தார்.
அவர் அடுத்தவருடம் எழுத்துமூல அறிக்கையை முன்வைப்பார். இவ்வாறான நிலையில் காணாமற்போனவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கான அலுவலகம் அமைத்தல் மற்றும் காணாமற்போனோர் சான்றிதழ் வழங்குதல் ஆகிய சட்டமூலங்களை அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இன்றையதினம் ஆரம்பிக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 33வது கூட்டத் தொடர், எதிர்வரும் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

0 Responses to ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்; ஆட்கடத்தல்கள் பற்றி இலங்கை விடயமும் ஆராயப்படும்!