தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று டெல்லி தலைமை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நடைப்பெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த இவிகேஎஸ்.இளங்கோவன் தமது பதவியை ராஜினாமா செய்தார். இவர் ராஜினாமா செய்து 4 மாதங்கள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பு காலியாக இருந்தது.இந்நிலையில், இன்று டெல்லி காங்கிரஸ் தலைமை திருநாவுக்கரசரை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
திருநாவுக்கரசர் கடந்த 1977ம் ஆண்டு அறந்தாங்கி தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும், அப்போது இவர் அதிமுகவில் எம்ஜிஆர் அமைச்சரவையில் இடம்பெற்று இருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும், மத்தியில் பாஜக அமைச்சரவையிலும் இடம்பெற்று இருந்த இவர், பின்னர் பாஜகவிலிருந்து விலகி கங்கிரஸில் இணைந்தார்.

0 Responses to தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசர் நியமனம்!