சர்வதேச சந்தையில் தேயிலைக்கான விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய சூழல் தற்போது இல்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமாயின் சாதாரண, மத்தியதர வகுப்பைச் சேர்ந்த தோட்ட கம்பனிகளை இழுத்து மூடவேண்டிய அபாயம் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது, “நானும் தேயிலை, இறப்பர் உற்பத்தி செய்யும் பகுதியைச் சேர்ந்தவன், அதனால் எனக்கு இப்பிரச்சினை நன்கு புரிகிறது. உலகச் சந்தையில் தற்போது இறப்பர் மற்றும் தேயிலைக்கான விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. இவை மேலும் அதிகரிப்பதற்கான சூழ்நிலை தற்போதைக்கு இல்லை.
எனவே இது பாரிய பிரச்சினையாகும். உலக சந்தையில் விலை வீழ்ச்சியடைந்தால் எவ்வாறு சம்பளத்தை கூட்டி வழங்க முடியும். மத்தியதர வகுப்பைச் சேர்ந்த கம்பனிகளை மூட வேண்டிய நிலையே உருவாகும். இது குறித்து தொழிற்சங்கங்களும் கம்பனிகளும் புரிந்துணர்வுக்கு வரவேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவால் அதிகரிக்கும் சூழல் தற்போது இல்லை: ராஜித சேனாரத்ன