வடக்கு - கிழக்கு தமிழர்களின் தாயகம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ள கருத்தினை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நிராகரித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) முக்கியஸ்தரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்துள்ளார்.
எழுக தமிழ் பேரணியில் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்கள் நாட்டின் ஒருங்கிணைவுக்கு குந்தகம் விளைவிப்பன. அதனை, நிராகரிக்கும் அறிக்கையை வெளியிட வேண்டியது எதிர்க்கட்சித் தலைவர் என்கிற ரீதியில் இரா.சம்பந்தனின் பொறுப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே ஏ.எச்.எம்.அஸ்வர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to வடக்கு - கிழக்கு தமிழர்களின் தாயகம் என்பதை சம்பந்தன் நிராகரிக்க வேண்டும்: ஏ.எச்.எம்.அஸ்வர்