வியாழக்கிழமை வடகிழக்கு கென்யாவின் மண்டேரா நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் சோமாலியாவைச் சேர்ந்த இஸ்லாமிய போராளிக் குழுவான அல் ஷபாப் தொடுத்த தாக்குதலில் 6 கிறித்தவர்கள் கொல்லப் பட்டுள்ளதாக அவர்களின் டெலிகிராம் கணக்கில் தெரிவிக்கப் பட்டுள்ளது. பூர்வீக சோமாலிய முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கென்யாவின் இப்பகுதியில் நன்கு திட்டமிடப் பட்டே அல் ஷபாப் இத்தாக்குதலைத் தொடுத்ததாகவும் வியாழக்கிழமை காலை இச்சம்பவம் நடைபெற்றதாகவும் தெரிய வருகின்றது.
இத்தாக்குதல் நடைபெற்ற போது குறித்த குடியிருப்பு கட்டடத்தில் 33 பொது மக்கள் இருந்ததாகவும் கொல்லப் பட்ட 6 பேரைத் தவிர ஏனைய அனைவரும் காயமின்றி தப்பித்து விட்டதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. சோமாலியாவின் அல்ஷபாப் போராளிக் குழு கடந்த சில வருடங்களாக முஸ்லிம்கள் அல்லாதர்வகளைத் தேர்வு செய்து படுகொலை செய்து வருகின்றது.
2014 ஆம் ஆண்டு நவம்பரில் பஸ் வண்டி ஒன்றை இடை மறித்து முஸ்லிம்கள் அல்லாத 28 பேரைத் தேர்வு செய்த அல் ஷபாப் அவர்களை சுட்டுக் கொன்றது. 2015 ஆம் ஆண்டு வடகிழக்கு கென்யாவின் கரிஸ்ஸா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் அல்லாத மாணவர்களை வரிசையில் நிற்க வைத்து அல் ஷபாப் இரக்கமின்றி சுட்டுக் கொன்றது. இதில் பலியானவர்கள் தொகை 148 என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to கென்யாவில் கிறித்தவர்கள் மீது அல் ஷபாப் போராளிக் குழு தாக்குதல்: 6 பேர் பலி