வறட்சி காலங்களில் மாநிலங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்காவிடில் மத்திய அரசிடமிருந்து உணவுப் பொருட்கள் வழங்கும் உரிமை பறிக்கப்படும் என்று, உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குஜராத், பீகார்,ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய உணவுப் பொருட்களை வழங்கவில்லை என்று, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கலானது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், வறட்சி காலங்களில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய உணவுப் பொருட்களை மத்திய அரசு வழங்காதது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் மத்திய அரசு, மாநில அரசுகளுடன் எப்போதும் தொடர்பில் உள்ளது என்றும் மாநில அரசுகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், உணவுப் பாதுகாப்பு சட்டத்தை முறைப்படி கடைப்பிடிப்பது மாநில அரசுகளின் கடமை என்றும்,தெரிவிக்கப்பட்டது.
மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய உணவுப் பொருட்களை வழங்க மறுத்தால், மத்திய அரசிடமிருந்து உணவுப் பொருட்கள் வழங்கும் உரிமம் பறிக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

0 Responses to மாநிலங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்காவிடில் மத்திய அரசிடமிருந்து உரிமை பறிக்கப்படும்: நீதிமன்றம்