காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, ஜெயலலிதாவை சந்தித்து உடல் நலம் குறித்து அறிய சென்னை வருகிறார். இந்த நேரத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், முதல்வருக்கு நீண்ட நாட்கள் சிகிச்சை தேவை என்று அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 16 நாட்களாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறப்பு மருத்துவர்கள், லண்டன் மருத்துவர்கள், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், முதல்வரின் உடல் நன்றாகத் தேறி வருவதாகவும், அவர் நீண்ட நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் தமது ட்வீட்டர் வலைத் தளத்தில் முதல்வர் நலம் பெற வேண்டும் என்று ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று தனி விமானம் மூலம் சென்னை வந்துள்ள ராகுல்காந்தி, நேராக மருத்துவமனைக்கு செல்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

0 Responses to ராகுல்காந்தி முதல்வரை காண சென்னை வருகை:முதல்வருக்கு நீண்ட சிகிச்சை தேவை: அப்போலோ