Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிரிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்க ராணுவம் தயார் நிலையில் உள்ளது என்று, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். அதோடு உளவுத்துறை எச்சரிக்கை காரணமாக முக்கிய விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

உத்திர பிரதேசம் லக்னோவில், நிகழ்ச்சி ஒன்றில்  கலந்துகொண்டு உரையாற்றிய மனோகர்  பாரிக்கர், நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்திய மக்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று கூறினார். மேலும், இந்தியாவின் பாதுகாப்புக் குறித்த விவகாரத்தில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார். 

தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவ வீரர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது என்றும், வீரர்கள் எதிரிகளுக்கு பதிலடிக்கு கொடுக்கத் தயார் நிலையில் உள்ளனர் என்றும் அவர் கூறினார். 

இந்தியாவில் எல்லையோர மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது இதையடுத்து  இந்தியாவில் 4 மாநிலங்களில் 22 விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

0 Responses to எதிரிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்க ராணுவம் தயார்: மனோகர் பாரிக்கர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com