வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரசியலமைப்பினை மீறும் வகையில் கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியில் சி.வி.விக்னேஸ்வரன் அரசியலமைப்பினை மீறும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக தெரிவித்து கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) முக்கியஸ்தரான தினேஷ் குணவர்த்தனவால் நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்துள்ள அரசாங்கத்தின் பிரதம கொறடாவும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, “அரசியலமைப்பினை மீறும் வகையில் தான் எந்தக் கருத்துக்களையும் வெளியிடவில்லை என்று சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். அப்படியான நிலையில் அது பற்றி உரையாட வேண்டிய அவசியம் இல்லை.” என்றார்.
இந்த விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெளிவான பதில்களை எதிர்வரும் காலத்தில் வழங்குவார் என்று சபாநாயகர் கரு ஜெயசூர்யா கூட்டு எதிரணியினருக்கு அறிவித்துள்ளார்.

0 Responses to சி.வி.விக்னேஸ்வரன் அரசியலமைப்பினை மீறி கருத்துக்களை வெளியிடவில்லை: அரசாங்கம் அறிவிப்பு!