தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் தேறி வருகிறது என்று, சென்னை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 12 நாட்களாக ஜெயலலிதா உடல் நல குறைவு காரணமாக அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வரின் உடல் நிலைக் குறித்து, தொண்டர்கள் கவலை கொண்டு இருக்கும் இந்த நேரத்தில், முதல்வரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என்று, அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் நேற்று மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், நுரையீரல் தொற்றுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், செயற்கை சுவாசத்தின் மூலம் முதல்வர் நன்றாக சுவாசிக்கிறார் என்றும் தகவல் வெளியிட்டுள்ளது. அதோடு, முதல்வரின் உடல்நிலை சிகிச்சைக்கு நன்றாக ஒத்துழைப்பு அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், இன்னும் சில நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமுடன் வீடு திரும்புவார் என்று தகவல் வெளியிட்டுள்ளது.

0 Responses to முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் தேறி வருகிறது: அப்போலோ நிர்வாகம்