மறைந்து போகும் ஆயுத கலாச்சாரம் மீண்டும் உருவாக இடமளிக்காமல் அனைவரும் பொறுப்புடன் நடக்க வேண்டும் என்று யாழ். போதனா வைத்தியசாலை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஊடகங்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைத்துள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு கோரப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளாவது, “விபத்துகள், கொலைகள், தற்கொலைகள், என்பவற்றால் தமிழ் சமூகம் சமீப காலமாக பல இளம் உயிர்களை இழந்து வருகிறது . இவ் இரு பல்கலைக்கழக மாணவரினதும் இழப்பு எம்மிடையே மிகுந்த கவலையையும் மீண்டும் ஆயுத அடக்குமுறை அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
எமது இரு சகோதரர்களினதும் அவர்களது குடும்பங்களிற்கும் எங்கள் இரங்கல்களை தெரிவித்து கொள்வதோடு மறைந்து போகும் ஆயுத கலாச்சாரம் மீண்டும் உருவாக இடமளிக்காமல் அனைவரும் பொறுப்புடன் நடக்க வேண்டும் எனவும் விசாரணைகளில் நீதி நிலைநாட்டப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.” என்றுள்ளது.

0 Responses to ஆயுத கலாச்சாரம் மீண்டும் உருவாக இடமளிக்கக் கூடாது: யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ அதிகாரிகள் சங்கம்