யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், நீதி கோரியும் சக மாணவர்களினால் இன்று திங்கட்கிழமை பெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் ஆரம்பித்த இந்தப் போராட்டம், ஒரு கட்டத்தில் ஏ9 வீதியை முற்றுகையிட்டுச் சென்றது. எந்தவித கலவரங்களுமின்றி அமைதியான முறையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்களும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களும், ஊழியர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
யாழ். மாவட்ட செயலாளர் என்.வேதநாயகத்திடம் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கான மகஜர் யாழ். பல்கலைக்கழக மாணவர் சங்கப் பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டதோடு ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.
இதனிடையே, யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைக்கு நீதி கோரி, கிழக்கு பல்கலைக்கழகத்திலும் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

0 Responses to சக மாணவர்களின் படுகொலைக்கு நீதி கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!