தமிழர்களுக்கு இந்த நாட்டில் பிரச்சினைகள் எவையும் கிடையாது என்று பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
“வடக்கு சிங்களவர்களுக்கே உரித்தானது. இலங்கையில் 2500 ஆண்டு பழைமையான வரலாற்றின் சொந்தக்காரர்கள் நாங்கள். அதனால், வடக்கை தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா நகரில் நேற்று வெள்ளிக்கிழமை பொது பல சேனா ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழர்கள் இலங்கையை அல்லது வடக்கை சொந்தம் கொண்டாட முடியாது. பெரும்பான்மை இனத்தனவரான சிங்களவர்களுக்கே வடக்கு சொந்தம்.
வடக்கில் விகாரைகள் அகற்றப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. அவை அனைத்தும் முறைகேடானது. இலங்கையை உருவாக்கியது பௌத்தர்களே, அவர்களுக்கு எங்கும் விகாரைகள் எழுப்ப உரிமையுள்ளது. இந்த போராட்டம் வெறும் ஆரம்பம் மட்டுமே. எமக்கான உரிமைகளை பெற்றுக் கொள்ளும் வரை போராட்டம் தொடரும்.
அடுத்து யாழ்ப்பாணத்திலும் சென்று ஆர்ப்பாட்டம் நடத்த எமக்கு முடியும். அதற்கான உரிமையும் எமக்கு உண்டு. இன்று கொழும்பில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அவர்களை நாம் அனுசரித்தே வாழ்கின்றோம். சிங்கள மக்கள் நல்லுறவுடன் செயற்படுகிறார்கள். தமிழ் மக்களே பிரிவினையை ஏற்படுத்தப்பார்கிறார்கள்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கொழும்பில் வசித்ததால் அவர் இனங்களுக்கிடையில் நட்புறவை ஏற்படுத்துவார் என எதிர்பார்தோம். ஆனால் அவரும் அவரது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இன்றும் புலிகளின் கொள்கையையே கடைப்பிடித்து வருகின்றனர்.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கு சிங்களவர்களுக்கே சொந்தமானது; தமிழர்களுக்கு பிரச்சினைகள் கிடையாது: ஞானசார தேரர்