கடந்த 20 வருடங்களாகத் தனது நாட்டில் எத்தனை குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர் என்ற கருத்துக் கணிப்பை பாகிஸ்தான் மேற்கொள்ளவில்லை என்று கூறும் ஊடக அறிக்கை ஒன்று சனிக்கிழமை வெளியாகியுள்ளது.
இதில் பாகிஸ்தானிலுள்ள பல குழந்தைத் தொழிலாளர்கள் இன்னமும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதைக்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பாகிஸ்தானிலுள்ள 4 மாகாணங்களான சிந்த், பஞ்சாப், கைபர் பக்துங்க்வா மற்றும் பலோச்சிஸ்டான் ஆகியவை இன்னமும் ஒருதடவை கூட குழந்தைத் தொழிலாளர் கருத்துக் கணிப்பை மேற்கொள்ளவில்லை எனவும் குறித்த டாவ்ன் (Dawn) பத்திரிகை தெரிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தானில் மிக மோசமான குழந்தைத் தொழிலாளர் அடிமை முறை காணப்படுவதாகக் கணிக்கப் பட்டுள்ளது. பாகிஸ்தானில் 25 மில்லியன் சிறுவர்கள் பாடசாலை செல்வதில்லை என்றும் இதில் 15 மில்லியன் பேர் தமது குடும்பத்துக்காக பல தரப்பட்ட அடிமை முறைத் தொழில்களில் ஈடுபட்டு வருவதாகவும் குறித்த அறிக்கை தெரிவிக்கின்றது.
குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்கு நல்வாழ்க்கை அளிக்க வேண்டுமென்றால் அவர்களை மீட்பதற்கான நிதியுதவி தேவைப் படும் எனவும் பல இடங்களிலும் குழந்தைத் தொழிலாளர் மீட்பு நிலையங்கள் அமைக்கப் பட வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 1991 ஆம் ஆண்டின் சிறுவர் தொழிலாளர் சட்டம் 18 ஆம் திருத்தம் மூலம் பாகிஸ்தானில் நீக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to உலகில் மிக அதிக குழந்தைத் தொழிலாளர்களைக் கொண்ட நாடாக மாறி வரும் பாகிஸ்தான்!