வடக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்களை செய்து, தமிழ் மக்களின் விகிதாசாரத்தினை குறைப்பதே அரசின் திட்டம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எப்பின் தவைருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஈ.பி.ஆர்.எல.எப் கட்சியின் வவுனியா அலுவலகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளதாவது, “வடக்கு கிழக்கில் பௌத்த மேலாதிக்கத்தை கொண்டு வருவதற்கே அரசு முயற்சிக்கின்றது. கொக்கிளாயில் தனியார் காணியில் பௌத்த விகாரை அமைக்கப்படுகின்றது. சிங்கள குடியேற்றங்கள் ஊடாக, வடக்கில் 30 வீதம் சிங்கள மக்களை குடியேற்றி தமிழர்களின் விகிதாசாரத்தை குறைப்பதே அரசின் முக்கிய நோக்கமாகும். இதற்காகவே சிங்கள அரசாங்க அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இலங்கையில் இரண்டு இலட்சம் இராணுவத்தினர் உள்ளனர். இவர்களில் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் வடக்கில் உள்ளனர். அவர்கள் இங்கு பௌத்த விகாரைகளை அமைத்து வருகின்றனர்.
இந் நிலையில் சமஷ்டி அரசியல் அமைப்பு முறை வந்தாலேயே தமிழர்களின் பிரச்சினை தீரும். அத்துடன் வடக்கு கிழக்கில் மக்கள் ஒன்றிணைந்து அபிவிருத்தியும் அடைவார்கள். இதனை கூறும்போது ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களும், சுதந்திர கட்சியினரும், மக்கள் விடுதலை முன்னணியினரும், தீவிரவாத போக்குடைய சிங்களவர்களும் வடக்கு மக்கள் இனவாதமாக செயற்படுவதாக கூறுகின்றனர். சமஷ்டியை கோருவதால் எங்கு இனவாதம் உள்ளது என்பது தெரியவில்லை.
ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வென்று அரசு கூறுகின்றது. இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் பேச வேண்டும் எனவும் அப்பேச்சுவார்த்தை மூன்றாம் தர மத்தியஸ்தத்துடன் நடைபெறவேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியது. ஆனால் அதுவும் நடைபெறவில்லை.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கில் சிங்களக் குடியேற்றங்களைச் செய்து தமிழ் விகிதாசாரத்தை குறைப்பதே அரசின் திட்டம்: சுரேஷ் பிரேமச்சந்திரன்