பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் வரையில் யாழ். பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் எதுவும் இடம்பெறாது என்று யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் கந்தசாமி ரஜீவன் தெரிவித்துள்ளார்.
படுகொலையான மாணவர்களுக்கு நீதி கோரி இன்று திங்கட்கிழமை யாழ். மாவட்ட செயலாளரிடம் கையளிக்கப்பட்ட மகஜருக்கு சாதகமான பதில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடமிருந்து கிடைக்கும் வரை யாழ். பல்கலைக்கழகத்தின் சகல பீடங்கங்களின் கல்விச் செயற்பாடுகளும் இடம்பெறாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

0 Responses to படுகொலையான மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை கல்விச் செயற்பாடுகள் இடம்பெறாது: யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்