அதிமுக பிரார்த்தனை என்கிற பெயரில் சிறு குழந்தைகளுக்கு அலகு குத்துவது மனித உரிமை மீறல் என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இவரது உடல் நலம் பூரண குணமடைய வேண்டும் என்று, தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை ஆர் கே நகரான ஜெயலலிதாவின் தொகுதியில் உள்ள நேதாஜி நகர் முருகன் கோயிலில், 5 வயது முதல் 15 வயது வரையான குழந்தைகளுக்கு ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து அலகு குத்தப்பட்டு வருகிறது.
இது வட சென்னை வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் இரக்கமற்ற வேலை என்று ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறலான இந்த செயலுக்கு மனித உரிமை ஆணையம், குழந்தைகள் நல உரிமை பாதுகாப்பு மையம் இரண்டும் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, இனி இதுப்போன்று சிறுவர்கள், சிறுமிகள் துன்புறுத்தப் படாமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும் என்று ராம்தாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

0 Responses to பிரார்த்தனை என்கிற பெயரில் அதிமுக சிறு குழந்தைகளுக்கு அலகு குத்துவது மனித உரிமை மீறல்: ராமதாஸ்