புதிதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேர் நீதிபதிகளாக இன்று பதவியேற்றனர்.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் பணியிடங்கள் வெகுவாக காலியாக இருந்த நிலையில், 15 நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து இருந்தார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.கிருஷ்ண கவுல் புதிய நீதிபதிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.இதில் வழக்கறிஞர்களாக இருந்தவர்கள் என்று 9 பேரும், பல்வேறு துறைகளில் நீதிபதிகளாகப் பணி புரிந்த நீதிபதிகள் 6 பேரும் என்று மொத்தம் 15 பேர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 54 என்று தெரிய வந்துள்ளது.

0 Responses to சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 15 நீதிபதிகள்; இன்று பதவியேற்றனர்!