பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களுக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அறிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் டெல்டா பகுதியில் விவசாயம் செய்த பயிர்கள் கருகிய நிலையினால் ஏற்பட்ட இழப்பு காரணமாக இதுவரை 9 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.
காளிங்கராயன் கால்வாயில் தண்ணீர் திறக்காத காரணத்தால் மஞ்சள் பயிர் கருகியதால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக சில நாட்களுக்கு முன்பு ராமலிங்கம் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.இந்தநிலையில், குப்புசாமி என்ற விவசாயியும் தாம் பயிரிட்ட மஞ்சள் பயிர் கருகியதைப் பார்த்து தாங்கிக் கொள்ள முடியாமல் பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்ட கோரச் சம்பவம் அனைவரது நெஞ்சையும் உலுக்கியிருக்கிறது.
எனவே, தமிழக விவசாயிகள் மத்தியில் பெருகி வரும் தற்கொலைகளை மூடிமறைக்கிற முயற்சியில் தமிழக அரசு ஈடுபடாமல் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்ட ஈடாக ரூ.15 லட்சம் வழங்குவதோடு காளிங்கராயன் கால்வாயில் தண்ணீர் திறந்து விவசாயிகளின் பயிரை காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

0 Responses to பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களுக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: திருநாவுக்கரசர்