நிலைமை மோசமானால் கிளர்ச்சி வெடிக்கும் என்று மோடி அரசுக்கு சீத்தாராம் யெச்சூரி எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தத்ததற்கு எதிராக கேரளா திருவனந்தபுரம் ரிசர்வ் வங்கி முன்பு தர்ணா போராட்டம் நடைப்பெற்றது. போராட்டத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் பேசினார்.சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் இருந்தனர்.
ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரத்தையும் மிகக் கடுமையான சிக்கலுக்குள் தள்ளிவிட்டுள்ள அராஜகத்தை கைவிட்டு, போதுமான அளவு ரூபாய் நோட்டுகள் சப்ளை செய்யும் வரை பழைய ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என மோடி அரசை சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தினார். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை கண்டித்தும், கூட்டுறவு வங்கிகள் திட்டமிட்டு முடக்கப்பட்டிருப்பதை கண்டித்தும் திருவனந்தபுரத்தில் ரிசர்வ் வங்கி முன்பு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் மாபெரும் தர்ணாப் போராட்டம் நடைபெற்றது.
கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் அனைத்து அமைச்சர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுஜனநாயக முன்னணியின் அனைத்து தலைவர்களும் பங்கேற்ற இந்தப் போராட்டத்தை துவக்கி வைத்து கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி. உரையாற்றினார். அப்போது, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததற்கு காரணமாக பிரதமர் நரேந்திரமோடி முன்வைத் துள்ள கறுப்புப் பணம் உள்ளிட்ட எந்தப் பிரச்சனைக்கும் இந்த வழியில் தீர்வுகாண முடியாது என்று சுட்டிக்காட்டினார்.
தற்போதைய நிலையில் எங்களது கோரிக்கை என்பது, போதுமான அளவு புதிய ரூபாய்நோட்டுகள் இந்திய வங்கி கட்டமைப்பு முழுவதும் சென்றடைந்து மக்களது கைகளுக்கு செல்லும் வரை பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்பதுதான் என்றும் யெச்சூரி கூறினார்.
ஆனால் இதை மறுத்து, ஒட்டுமொத்த வங்கிகட்டமைப்பையும், இந்தியப் பொருளாதாரத்தையும், மக்களையும் துயரத்தின் பிடியில்தள்ளிவிட்டுள்ள பிரதமர் மோடியின் பாசிசத் தனமான அணுகுமுறை தொடருமானால், அதை ஒருபோதும் ஏற்று கொள்ள முடியாது என்று குறிப்பிட்ட யெச்சூரி, பிரதமர் மோடியின் ‘பைத்தியகாரத்தனமான துக்ளக் பாணி’ நடவடிக்கைகளை கை விடாவிட்டால் நாடு முழுவதும் மிகப் பெரும் கிளர்ச்சிகள் வெடிப்பதை தடுக்க முடியாது என்றும் எச்சரித்தார்.‘
'இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் மக்களே உயர்வானவர்கள்; முதன்மையானவர்கள். அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வரியே ‘மக்களாகிய நாம்’ என்றுதான் துவங்குகிறது. அத்தகைய முதன்மையான அந்தஸ்து பெற்றுள்ள இந்திய நாட்டின் மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் பிரதமருக்கு இல்லை’ என்றும் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

0 Responses to நிலைமை மோசமானால் கிளர்ச்சி வெடிக்கும்: மோடி அரசுக்கு சீத்தாராம் யெச்சூரி எச்சரிக்கை!