நாடு முழுவதும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலும் யோகா பாடத்தை கட்டாயமாக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
மூத்த வக்கீலும், டெல்லி மாநில பா.ஜ., செய்தித் தொடர்பாளருமான அஸ்வினி குமார் உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: நாடு முழுவதும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலும் யோகா பாடத்தை கட்டாயமாக்க வேண்டும். இதற்கான உத்தரவை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், என்.சி.டி.இ., சி.பி.எஸ்.இ., என்.சி.இ.ஆர்.டி., போன்றவற்றிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தேசிய யோகா கொள்கையை மத்திய அரசு நெறிமுறை வேண்டும் என்று .மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமையை சுகாதார தினமாக அனுசரிப்பதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும். இதன் மூலம் பொதுமக்களுக்கு யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கைமீது உச்ச நீதிமன்றம் வருகிற 7ம் திகதி விசாரணை நடத்த உள்ளது.

0 Responses to பள்ளிகளில் கட்டாய யோகா; உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!