Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித்த ராஜபக்ஷவின் பங்களிப்போடு விண்ணுக்கு ஏவப்பட்ட 'சுப்ரீம் செட்' செய்மதிக்கு என்ன நடந்தது? இதனை அறிவதற்கு அரசாங்கம் மற்றுமொரு செய்மதியை விண்ணுக்கு ஏவுமா?, என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கேள்வியெழுப்பியுள்ளது. 

வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நேற்றைய (வெள்ளிக்கிழமை) விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, “சுப்பிரீம் செட் தனியார் கம்பனி இலங்கை முதலீட்டு சபையுடன் செய்மதி தொழில்நுட்பம் தொடர்பில் 2012 மே மாதம் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டது. இந்த நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு இருக்கும் தொழில்நுட்ப அறிவுபற்றி முதலீட்டு சபைக்கு அறிவிக்கப்படவில்லை. இந்த நிறுவனம் 1.8 பில்லியன் ரூபா முதலீடு செய்வதாக ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்தபோதும், 111 இலட்சம் ரூபாவே முதலீடு செய்யப்பட்டுள்ளது. விண்ணுக்கு அனுப்பப்பட்ட செய்மதிக்கு என்ன நடந்தது எனத் தெரியாது.

சுப்பிரீம் செட் கம்பனிக்கு செய்மதி அனுப்புவது தொடர்பில் தான் பின்னாலிருந்து அறிவுரை வழங்கியதாக ரோஹித்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார். முதலீட்டு சபையுடனான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே செய்மதி விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளதால் இந்த செய்மதிக்கு என்ன நடந்தது?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

0 Responses to மஹிந்தவின் இளைய மகனின் பங்களிப்போடு ஏவப்பட்ட 'சுப்ரீம் செட்' செய்மதிக்கு என்ன நடந்தது?; ஜே.வி.பி கேள்வி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com