Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இனமுரண்பாடுகளுக்கு ஒற்றையாட்சிக்குள் தீர்வைக் காண முடியாது. அப்படியான தீர்வினை நம்பவும் முடியாது. சமஷ்டி அடிப்படையிலான தீர்வே பொருத்தமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும்  பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இந்த அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்குவது நியாயமா என எமது மக்கள் கேட்கின்றனர். பிக்குமாரும், இராணுவத்தினரும் பௌத்தர்கள் வாழாத இடங்களில் பௌத்த சிலை வைக்கின்றனர். மன்னார், திருகோணமலை, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் கோவில்களுக்கு முன்னால் புத்தர் சிலை வைக்கப்படுகிறது. ஜனாதிபதி தலையிட்டு இதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். யாரும் விரும்பியவாறு பௌத்த மதத்துக்கு விரோதமாக இனமுரண்பாடு ஏற்படும் விதத்தில் புத்த சிலை வைப்பதை நிறுத்த வேண்டும்.

இனப்பிரச்சினையை தீர்க்க இந்த பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளது. உபகுழுக்களின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. சர்வதேச சமூகத்தின் மீது நாம் நம்பிக்கையிழக்கவில்லை. நாட்டை பிரிக்க கோரவில்லை. சமஷ்டி தீர்வை கோருகிறோம். அதிகாரத்தை முழுமையாக பகிர வேண்டும். கொடுத்த அதிகாரம் திருப்பி பெறப்பட்டது. ஒற்றையாட்சி தீர்வை நம்ப முடியாது. எஸ்.டபிள்யூ.ஆர்.டிபண்டார நாயக்க தான் முதலில் சமஷ்டி தீர்வு பற்றி பேசினார்.

முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமையையும் அங்கீகரிக்க வேண்டும். வடக்கு, கிழக்கில் நாம் ஒன்றாக வாழ வேண்டும். இந்த நாட்டுக்கு சமஷ்டி தீர்வே பொருத்தமானது. வேறு நாடுகளில் உள்ள சமஷ்டி அதிகாரமுறைக்கு ஒத்த தீர்வு இங்கு வழங்கப்பட வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to ஒற்றையாட்சி தீர்வை நம்ப முடியாது; சமஷ்டித் தீர்வே பொருத்தமானது: கூட்டமைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com