ஈழத் தமிழரை படுகொலை செய்த காங்கிரஸ் கட்சியை புதுவையில் விடுதலைச் சிறுத்தைகள் ஆதரிப்பதற்கு சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் இந்திய ஊடகங்களுக்கு கூறியுள்ளதாவது:
“ஈழத் தமிழரை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சியை புதுவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எப்படி ஆதரிக்கலாம்?
டெல்லியில் இன்று மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
4 அல்ல 40 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினாலும் மீனவர் பிரச்சினை தீரப்போவதில்லை.
சிறுவாணியில் அணை கட்ட கேரளாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை நாம் வரவேற்கிறோம்.
தமிழர்களின் தொடர் போராட்டத்தால்தான் மத்திய அரசு இந்த தடையை விதித்துள்ளது” என்று சீமான் கூறினார்.
மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு இந்திய மத்திய இணையமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர்களுக்கு பல துரோகங்களை செய்த காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருப்பதற்கு பலதரப்பிலும் கண்டனங்கள் எழுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஈழத் தமிழரை கொன்ற காங்கிரஸை ஆதரிப்பதா? சீமான் பாய்ச்சல்