சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் ஆராய்ந்த பின்னரே, ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையினை மீண்டும் வழங்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே, மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவதா, இல்லையா எனத் தீர்மானிப்பதற்கு, இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட தூது குழுவுடன் கலந்துரையாடினோம்.
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவதை வரவேற்கிறோம். கட்டாயம் அது கொடுக்கப்பட வேண்டும். என்ன காரணங்களுக்காக அது நீக்கப்பட்டதோ, அந்தக்காரணங்கள் தொடர்பில், ஆராய வேண்டும்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்குப் பதிலாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், மிகவும் மோசமானதாக உள்ளது என அவர்களிடம் தெரிவித்தோம்.
இலங்கை அரசாங்கம், மனித உரிமைகள் தொடர்பிலும் புதிய அரசியலமைப்புத் தொடர்பிலும் சர்வதேச சமூகத்துக்குக் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என முறையாக ஆராய்ந்த பின்னரே, ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையினை மீண்டும் வழங்க வேண்டும்.
பொறுப்புக் கூறல் கடப்பாட்டின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில், காணாமற் போனோர் தொடர்பான அலுவலகம் அமைப்பது தொடர்பான சட்டம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், காணாமற்போனோர் தொடர்பான ஆணைக்குழு அமைக்கப்படவில்லை.
சில நிபந்தனைகளின் அடிப்படையில், ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கொடுக்கப்பட வேண்டும். உதாரணமாக, ஒருவருடம் அல்லது ஆறு மாதத்துக்குள், சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றனவா என பார்த்து கொடுக்கப்பட வேண்டும் என அவர்களிடம் தெரிவித்தோம்.” என்றுள்ளார்.

0 Responses to வாக்குறுதிகளை நிறைவேற்றினால் இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குங்கள்; ஐரோப்பிய ஒன்றியத்திடம் கூட்டமைப்பு தெரிவிப்பு!