சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரிலுள்ள மசூதியொன்றில் நேற்று திங்கட்கிழமை ஆயுததாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
Militaerstrasse, Eisgasse தெருவில் உள்ள மசூதியில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் மசூதிக்கு உள்ளே இடம்பெற்றதா? வெளியே இடம்பெற்றதா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து துப்பாக்கிதாரி சம்பவ இடத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளார்.
சம்பவத்தை அடுத்து குறித்த பகுதி பொலிஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது, தப்பிச்சென்றுள்ள குற்றவாளியை கண்டறிய பெரியளவில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 Responses to சுவிஸ், சூரிச் நகரிலுள்ள மசூதி ஒன்றில் துப்பாக்கிச் சூடு; 3 பேர் படுகாயம்!