வடக்கு மாகாண சபை ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை 337 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் இந்த வருடத்தின் இறுதி அமர்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போதே, அவைத் தலைவர் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு முதலாவது அமர்வு 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் 25ஆம் திகதி இடம்பெற்றதிலிருந்து இன்று வரை இடம்பெற்ற அமர்வு வரை 337 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாகாண சபையின் ஆட்சிக் காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதன்படி வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் 3 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது.

0 Responses to வடக்கு மாகாண சபையால் இதுவரை 337 தீர்மானங்கள் நிறைவேற்றம்!