முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் மறைவை அடுத்து எதிர்வரும் 30ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக உள்விவகார அலுவல்கள் மற்றும் அரச நிர்வாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், அன்றைய தினம் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும், புது வருட கொண்டாட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் தொடர்பில் கருத்திற்கொண்டு, தேசிய தினத்தை டிசம்பர் 30ஆம் திகதிக்கு மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அன்னாருடைய இறுதிக் கிரியைகள் ஹொரணை விளையாட்டு மைதானத்தில் பூரண அரச அனுசரனையுடன் இடம்பெறும் என்றும் இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
ரட்ணசிறி விக்ரமநாயக்க, 2000 -2001 ஆண்டு மற்றும் 2005 - 2010 ஆண்டுகளில் இலங்கையின் பிரதமராக பதவி வகித்திருந்தார்.

0 Responses to புது வருடக் கொண்டாட்டங்களை முன்னிட்டு தேசிய துக்க தினம் ‘டிசம்பர் 30’க்கு மாற்றம்!