தமிழகத்தின் 45வது தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் இன்று பதவியேற்றார். அவர், 4வது பெண் தலைமைச் செயலாளர் ஆவார்.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும், அதற்குப் பின்னரும் தலைமைச் செயலராக இருந்த ராம் மோகன் ராவ் இல்லம்,அலுவலகம், அவரது மகனது இல்லம் என்று அனைத்து இடத்திலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் கோடிக்கணக்கான பணம், கிலோ கணக்கான தங்கம், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து ராம் மோகன் ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இன்று நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளது. இந்நிலையில், உடனடியாக தலைமைச் செயலர் பதவிக்கு கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார். அவர் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், மரியாதையை நிமித்தமாக முதல்வர் அவரை சந்தித்தார் என்று கூறப்படுகிறது.

0 Responses to தமிழகத்தின் 45வது தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் பதவியேற்பு!