புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் நிறைவேற்றம் உள்ளிட்ட விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு அவசியமானது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை சரியாக நிறைவேற்றி வருகின்றது. அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின் நகர்வுகள் மிகச்சரியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் அமைப்பின் மூலம் ஜனாதிபதி முறைமையையே இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொது வாக்கெடுப்பு மூலம் மக்களின் கருத்தறிந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
அரசியல் அமைப்பு உருவாக்கம் மற்றும் அரசாங்கத்தின் நகர்வுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

0 Responses to புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் கூட்டமைப்பின் பங்களிப்பு முக்கியம்: ராஜித சேனாரத்ன