அடுத்த வருடம் தமது முதல் கூட்டு இராணுவப் பயிற்சியை ஆரம்பிக்கவுள்ள சீனாவும் நேபாலும் அதற்கான ஆரம்ப கட்ட தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இது தொடர்பான செய்திகள் உரிய நேரத்தில் அறிவிக்கப் படும் எனவும் சீனப் பாதுகாப்பு அமைச்சு பேச்சாளர் யாங் யுஜுன் தெரிவித்துள்ளார்.
சீனாவின் இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. பிற நாடுகளாலும் மலைகளாலும் சூழ்ந்த (Land locked) நாடான நேபால் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இயற்கை வளம்மிக்க பிரதேசமாகவும் திகழ்ந்து வருகின்றது. ஓர் வெளிநாட்டில் மிக நீண்ட காலமாக தனது ஆதிக்கத்தை இந்தியா நிலைநிறுத்தி வரும் பிரதேசமாக விளங்கும் நேபாலில் இந்தியாவுக்கு சவாலாக சீனாவும் தனது ஆதிக்கத்தை அதிகரிக்க முற்பட்டு வருகின்றது. சீனாவும் இந்தியாவும் தமக்கிடையே நல்லுறவை வளர்க்க முற்பட்டு வரும் நிலையில் இவ்விரு நாடுகளும் நேபாலுடனான தமது எல்லைகளை விரிவுபடுத்துவதில் சர்ச்சையில் சிக்கியுள்ளன.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே சீன மற்றும் நேபால் இராணுவம் தமக்கிடையே பல வழிகளில் உதவிகளைப் பரிமாறி வருவதாகவும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள இராணுவப் பயிற்சி இரு நாடுகளுக்கும் இடையேயான முதலாவது கூட்டு இராணுவப் பயிற்சி எனவும் சீன வெளியுறவுத் துறை தனது இணையத் தளத்திலும் அறிவித்துள்ளது.

0 Responses to நேபாலுடன் தனது முதல் இராணுவப் பயிற்சியை அடுத்த வருடம் ஆரம்பிக்கின்றது சீனா