புதிய ரூபாய் நோட்டுகள் மக்களைச் சென்றடையா வண்ணம் இடையூறு நடப்பதாக மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையம் வந்த மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், ‛தமிழகத்தில் நடக்கும் ஒரு சில சம்பவங்களை வைத்து மத்திய அரசின் அழுத்தம் இருப்பதாக நினைப்பதாக கூறுவது தவறானது. ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தும் தி,மு.க.,வின் முடிவு, அக்கட்சியின் தார்மீக உரிமை.
புதிய ரூபாய் நோட்டுகள் போதிய அளவு அச்சடித்திருந்தும், அது மக்களிடத்தில் சென்றடைய விடாமல் இடையில் இருந்து யாரோ தடுக்கின்றனர். அவர்கள் யார் என்பதை மத்திய அரசு அடையாளம் கண்டு வருகிறது. அதன் வெளிப்பாடு தான் தற்போது கைப்பற்றப்படும் தொகை என்று கூறிய நிர்மலா சீத்தாராமன், ‛தமிழக தலைமை செயலாளர் வீட்டில் நடக்கும் வருமான வரித்துறை சோதனைக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தகவலின் அடிப்படையில் எந்த இடத்திலும் சோதனை நடத்தலாம் என்று கூறினார்..

0 Responses to புதிய ரூபாய் நோட்டுகள் மக்களிடம் சென்றடைய இடையூறு: நிர்மலா சீத்தாராமன்