தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நவம்பர் 5-ஆம் தேதி காலமானார். இந்நிலையில், அவரது சமாதியில் தினமும் பல்லாயிரம் மக்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் போயஸ் கார்டனிலும் மக்கள் அவரது வீட்டை பார்வையிட்டு வணங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், தமிழகம் முழுக்க அவருக்கு முழு உருவச் சிலைகளை வைக்க அதிமுக தொண்டர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
புதுச்சேரியில் அவருக்கு முதன் முதலாக சிலை வைக்கப்பட்டுள்ள நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கம்பட்டியைச் சேர்ந்த சிற்பி வரதராஜன் தனது சிமெண்ட் சிற்பக் கூடத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச் சிலைகளை உருவாக்கி வருகிறார். இவர் உருவாக்கிக் கொடுத்த சிலைதான் புதுச்சேரி திருக்கானூர் என்ற இடத்தில் தொழில் அதிபர் ரகீம் என்பவரால் வைக்கப்பட்ட கடந்த 16-ந்தேதி திறக்கப்பட்டது.
அந்த சிலையைப் பார்த்த அதிமுக பிரமுகர்கள் இந்த சிலை அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது இது எங்கு செய்யப்பட்டது என்ற தகவலைக் கேட்க சேலம் ஆத்தூர் சிற்பி வரதராஜனின் சிற்பக் கூடத்தில் உருவான தகவல் தெரிய பலரும் அந்த சிற்பக் கூடத்தில் ஜெயலலிதா சிலைக்கு ஆர்டர் கொடுத்து வருகிறார்கள். இதுவரை 10-க்கும் மேற்பட்ட சிலைகள் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இரவு பகலாக இந்த சிலைகள் உருவாகி வருகிறது.
இவர் எம்ஜிஆர் உயிருடன் இருந்தப்பவே அவரது சிலைகள் செய்து, எம்ஜிஆரின் நேரடி பாராட்டுதல்களையும் பெற்றவர் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to முதல்வர் ஜெயலலிதா சிலைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது