அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களாக சர்வதேச நாடுகளுடன் முன்னெடுத்துவரும் நட்புறவுக் கொள்கையும் நடவடிக்கையும் படையினருக்கு எதிரான சர்வதேச குற்றச்சாட்டுகளுக்கும், உள்நாட்டுப் பிரச்சினைகள் பலவற்றுக்கும் தீர்வு காண உறுதுணையாக அமைந்ததாக ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற சபுகஸ்கந்த மாகொலவிலுள்ள பாதுகாப்பு பதவி நிலை கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாவது, “வேகமாக மாறிவரும் உலகில் நாட்டின் பாதுகாப்பு துறைக்கு தேவையான நவீன தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
பாதுகாப்பு துறையினருக்கு வழங்கவேண்டிய வளங்களை வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதுடன், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையிலும் நாட்டின் பிரஜை என்ற வகையிலும் தாய் நாட்டின் பாதுகாப்புக்காக பாடுபட்டுவருகிறேன்.
தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பாதுகாப்பு துறை தொடர்பான பரந்த அறிவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துவரும் பாதுகாப்பு கல்லூரிக்கு பாராட்டு தெரிவிப்பதுடன், இக்கல்லூரி மூலம் நாட்டின் எதிர்கால பாதுகாப்பு தொடர்பில் திருப்தியடைய முடிகின்றது.
சர்வதேச ரீதியில் எமது நாட்டுக்கு ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் முயற்சியெடுத்தோம், பாதுகாப்பு படையினருக்கு எதிராக சர்வதேசத்தினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதற்கும் அதனால் உள்நாட்டில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்கும் அந்த முயற்சிகள் உறுதுணையாக இருந்தன.” என்றுள்ளார்.

0 Responses to படையினருக்கு எதிரான குற்றங்களை குறைக்க சர்வதேச நட்பு உதவியது: ஜனாதிபதி