தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கொல்வதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் ஆதரவளித்தனர் என்று இந்திய முன்னாள் வெளிவிவகாரச் செயலாளரும் பாதுகாப்பு ஆலோசகருமான சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
பிரபாகரனை மீட்பதற்கு அமெரிக்காவும் நோர்வேயும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்திய இந்திய அரசாங்கத்தின் கொள்கைக்கு, தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் தமது அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் தனிப்பட்ட ரீதியாகவும் மிகவும் ஆக்கபூர்வமான வகையில் ஆதரவை வெளிப்படுத்தினர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் எழுதிய நூலொன்றிலேயே இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கையிலுள்ள உண்மையான அரசியல் தலைவர்களை ஏற்கனவே இல்லாது ஒழித்ததைப் போன்று, இந்தியாவில் உள்ள உண்மையான தமிழர்களின் தலைவர்களையும் இல்லாது ஒழிப்பதன் மூலமாக மாத்திரமே பிரபாகரனால் தமிழீழத்திற்கு இட்டுச்செல்ல முடியும் என தமிழகத்திலுள்ள அரசியல் தலைவர்கள் தமது அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அறிந்திருந்ததாகவும் அவர் தனது நூலில் எழுதியுள்ளார்.

0 Responses to பிரபாகரனைக் கொல்வதற்கு தமிழகத் தலைவர்கள் ஆதரவளித்தனர்: மேனன்