மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ‘தி ஹிந்து’ பத்திரிகைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தற்பொழுது காணப்படும் ஆதரவு தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், “எனது நிலைப்பாட்டில் அவருக்கான அடிப்படை ஆதரவு இழக்கப்பட்டுள்ளது. ஏனெனில் காலம் கடந்து வருவதால் இளம் ஆதரவாளர்கள் அவருடன் இல்லை. இளம் வாக்காளர்களின் ஆதரவை இழந்தால் இழக்கப்பட்ட ஆதரவைப் பெறுவதற்கு வேறொரு கட்சி முயற்சிக்கும். எமது கொள்கைத் திட்டங்கள் வெற்றியளித்தால், மஹிந்த ராஜபக்ஷ தோல்வியுற்றவர் என்பதை மக்கள் உணர்வார்கள். அவர் மீண்டும் வருவார் என நினைக்கவில்லை. ஏனெனில், மக்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினால் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பமாட்டார்கள். மீண்டுமொரு மாற்றத்தை ஏற்படுத்தவேண்டுமாயின் வேறொரு வித்தியாசத்தையே ஏற்படுத்துவார்கள். அது நடைபெறும் என கருதமுடியாது, ஏனென்றால் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து செயற்படுகின்றன. செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பதையே மக்கள் பார்க்கின்றனர்.” என்றுள்ளார்.

0 Responses to மஹிந்த மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார்: ரணில்